வலி நிவாரணி என்ற பெயரில் அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை: சென்னை: சென்னையிலிருந்து அமெரிக்கா அனுப்புவதற்கு வந்த கூரியர் பார்சல்களை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை முகவரியிலிருந்து அமெரிக்காவின் புளோரிடா நகருக்கு அனுப்ப ஒரு பார்சல் வந்திருந்தது. அதனுள் காய்ச்சல், சளி, தலைவலி மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சந்தேகத்தின் பேரில் அதை பிரித்து பார்த்தபோது, 3,400 மாத்திரைகள் இருந்தன. அவை போதை மாத்திரைகள் என்று தெரிய வந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.15 லட்சம். அவற்றை பறிமுதல் செய்தனர். இந்த பார்சலை அமெரிக்காவுக்கு அனுப்ப முயன்ற சென்னையை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வலி நிவாரணி மாத்திரைகள் என்றால் கொரோனா வைரஸ் தடுப்பு மாத்திரைகள் என்று அதிகாரிகள் சோதனை செய்யாமல் அனுப்பி விடுவார்கள் என்று கருதி போதை மாத்திரைகளை கடத்த முயன்றது தெரியவந்தது.

Related Stories: