தஞ்சையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்: குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தது போலீஸ்!!!

தஞ்சை:  நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் ஆவேச போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இந்திய மாணவர் அமைப்பினர் கையில் சூலாயுதம், ஸ்டெடஸ்க்கோப்புடன் முற்றுகையிட்டனர். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அதுதொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும், தொடர் முழக்கங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால், இருதரப்பினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது தடுப்புகளை தாண்டி ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீட் தேர்வால் உரிழந்த மாணவர்களுக்கு சட்டப்பேரவையில், இரங்கல் தெரிவிக்க மறுத்த தமிழக அரசை கண்டிப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதேபோல், சிவகங்கையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அங்கு ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள மருதுபாண்டியர் நகர் நுழைவு வாயிலில் ஏறி நின்று நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், இந்தி திணிப்பிற்கு எதிராகவும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முழக்கமிட்டனர். பின்னர் தகவலறிந்து தீயணைப்பு துறையினருடன் சென்ற போலீசார், ஏணி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கீழே இறக்கி கைது செய்தனர். போராட்டக்காரர்களை கீழே இறக்க செல்லும்போது தேனீக்கள் கொட்டியதால் காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது.

Related Stories: