ஏற்ற இறக்கத்தில் தங்கத்தின் விலை; ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.39,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் நிலையற்ற சூழல் நிலவி வருகிறது. அமெரிக்க டாலர் மதிப்பு சரியும்போது தங்கத்தின் விலையும் சரிவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறியீடு சரிவு உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்தது. இதையடுத்து, இதன் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது. தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முந்தைய நாட்களில் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்தது.

பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.

கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.39,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.36 உயர்ந்து ரூ.4,952-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.71.30-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.71,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: