ஜப்பான் பிரதமராகிறார் யோஷிதே சுகா

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், கடந்த மாதம் தனது ஓய்வை அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அபேக்கு பதிலாக கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் 377 வாக்குகள் பெற்று பிரதமராகத் தேர்வாகியுள்ளார் யோஷிதே சுகா. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் சேர்ந்தே 157 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடக்கும் வாக்கெடுப்பிலும் யோஷிதே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

Related Stories: