மீண்டும் அதிமுகவில் சலசலப்பு எடப்பாடிக்கு ஆதரவாக போஸ்டர்: தேனியில் பரபரப்பு

தேனி:  தேனியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனியில் இருந்து மதுரை  செல்லும் சாலையில், அரப்படித்தேவன்பட்டி பகுதியில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.  அதில்,  ‘எடப்பாடியாரை புறம் பேசுபவர்கள் இதை படித்த பின்னராவது திருந்தட்டும்’ எனும் தலைப்பில் அரசின் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டுள்ளனர்.  தொடர்ந்து பட்டியலிட்டால் கணக்கிலடங்காது. மக்களின் முதல்வர் எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகி விடும்.

என்றும் எடப்பாடியாரோடு.. மீண்டும் எடப்பாடி.. வேண்டும் எடப்பாடி... இவண் நேதாஜி சுபாஷ் சேனை’ என குறிப்பிடப்பட்டிருந்தது.  மேலும் இந்த  போஸ்டரில் பெரிய அளவில் எடப்பாடி பழனிசாமி, சிறிய அளவில் ஓ.பன்னீர்செல்வம் படம் இடம் பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு,  ஓபிஎஸ்சை முதல்வர் என குறிப்பிட்டு, தேனி மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது  இபிஎஸ்சுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரானது, தேனி மாவட்ட அதிமுகவினரிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories: