காளையார்கோவிலில் பூச்சு பெயர்ந்து விழும் புதிய தாலுகா கட்டிடம்: பொதுமக்கள் அச்சம்

காளையார்கோவில்: காளையார்கோவில் ஒன்றியம் 43 பஞ்சாயத்து, 360க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்ட பெரிய ஒன்றியமாக உள்ளது. இப்பகுதி  கடந்த 2015ம் ஆண்டு தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 3 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த தாலுகா அலுவலகத்திற்கு  புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த 2017 டிசம்பரில் புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு ரூ.2 கோடியே 69 லட்சத்து 79  ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2019 ஜூன் 13ல் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த புதிய தாலுகா கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இக்கட்டிடம் கட்டி ஒரு ஆண்டு 3 மாதங்களே ஆன  நிலையில் மழைக்காலங்களில் கட்டிட சுவர்கள் முழுவதும் ஈரம் கசிந்து ஒழுகின்றது. தரமில்லாத கட்டுமான பணியில் கட்டிட பூச்சுகள் ஆங்காங்கே  பெயர்ந்து விழுகின்றன. மேலும் அலுவலகத்தில் போட்டள்ள டைல்ஸ் கற்கள் உடைந்து பொதுமக்களின் பாதங்களை பதம் பார்க்கிறது. எனவே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தரமான முறையில் பேட்ஜ் ஒர்க் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: