அன்புக்கு உண்டோ! அடைக்கும் தாழ்!... இறந்த அன்பு மனைவின் நினைவாக சிலை அமைத்தார் மதுரை தொழில் அதிபர்!

மதுரை: மறைந்த சில நாட்களில் மறந்து விடுவோர் மத்தியில், மரணித்துவிட்ட அன்பு மனைவிக்கு முழு உருவ சிலையை அமைத்திருக்கிறார் மதுரையை சேர்ந்த சேதுராமன். மனைவி இறந்தும் வாழ்கிறார் என்ற வெளிப்பாடே இது என்கிறார் மதுரை ஷாஜகான். மின்னொளியில் புத்தம் புதிதாய் பளபளக்கும் 4 அடி சிலை. ஜொலிக்கும் பட்டுபுடவையுடன் புன்னகைக்கும் பெண்மணி. மறந்த தனது அன்பு மனைவிக்காக மதுரையை சேர்ந்த தொழிலதிபர் சேதுராமன் செய்த ஏற்பாடுதான் இவை. மேலப்பெண்ணாகரத்தை சேர்ந்த சேதுராமன் 48 ஆண்டுகளுக்கு முன்பு அதலைக் கிராமத்தை சேர்ந்த பிச்சைமணி என்பவரை கரம் பிடித்தார். 48 ஆண்டுகாலம் சேதுராமன்-பிச்சைமணி ஜோடி இணைபிரியாமல் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மாதம் 10ம் தேதி பிச்சைமணி மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். இதனால் சேதுராமனை தனிமை தொற்றி கொண்டது.

மனைவியின் பிரிவு வாட்டிய நிலையில், அவர் எப்போதும் உடனிருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்த வீட்டுக்குள் பிச்சைமணி சிலையை ஏற்படுத்த முடிவு செய்தார் சேதுராமன். இதனையடுத்து மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த பிரசன்னா என்ற கலைஞர் 4 அடி உயரத்திற்கு பிச்சைமணியின் உருவ சிலையை அச்சு அசலாக வடிவமைத்து தந்துருகிறார். சமீபத்தில், ஆந்திர மாநிலத்தில், இறந்த மனைவிக்கு ஒருவர் சிலை வைத்தது பற்றி அறிந்த சேதுராமன், தனது மனைவிக்கும் சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் சேதுராமனின் செயல் பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும், மனைவிக்கு நினைவு சின்னம் எழுப்பிய ஷாஜகானின் அன்புக்கு சற்றும் சளைத்தது இல்லை என்றே கூறலாம்.

Related Stories: