அரசு ஊழியர்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்ட கிசான் திட்டப்பணம்: உழவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் பகீர் தகவல்

சேலம்: சேலம் மண்டல உழவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் உச்சத்தில் இருந்த நேரத்தை சாதகமாக்கி, கிசான் திட்டத்தில் முறைகேடுகளை நடத்தியுள்ளனர். சமூக வலைதளங்களில் சில விஷமிகள், ரூ.1000 கொடுத்தால் ரூ.6ஆயிரம் அரசு நிதியுதவி கிடைக்கும் என்ற இந்த திட்டத்தை திரித்துக் கூறி, வசூல் செய்துள்ளனர். அவர்கள் விவசாயிகளுக்கான நிதி என்று கூறாமல், தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் நிவாரண உதவித் தொகை என்றே குறிப்பிட்டுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் ஆளுங்கட்சியினர் கூட, இதற்காக முன்னின்று விண்ணப்பங்களை வாங்கி உள்ளனர்.

அதே நேரத்தில் தனியார் இ-சென்டர்கள் மூலமாக விண்ணப்பித்தவர்களுக்கு பணம் கிடைத்துள்ளது. இதில் இ-சென்டர் ஊழியர்களின் உறவினர்கள், அவர்களுக்கு தெரிந்தவர்கள் என்று பலர், பயன் பெற்றுள்ளனர். இவை அனைத்திற்கும் மேலாக, ஒரு சில மாவட்டங்களில் அரசு ஊழியர்களின் வங்கிக்கணக்கிலும், அவர்களது குடும்பத்தினர் பெயரில் உள்ள வங்கிக்கணக்கிலும் பெருமளவில் இந்த பணம் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே சிபிசிஐடி போலீசார்,  தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

Related Stories: