ரஷ்யா பயணத்தை முடித்துக் கொண்டு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீர் ஈரான் பயணம்

தெஹ்ரான்: மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் நேற்றிரவு ஈரானை சென்றடைந்தார். இதுதொடர்பாக டுவிட்டில் தகவல் தெரிவித்துள்ளார். சீனாவுடனான சமீபத்திய பதற்றங்களுக்கு மத்தியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது ஈரான் சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. தெஹ்ரானில், ராஜ்நாத் சிங் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் இருதரப்பு உறவு குறித்து ஆலோசிக்க உள்ளார். பாதுகாப்பு அமைச்சரின் திடீர் ஈரான் வருகை, பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளதாக வெளியுறவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மற்றும் பாகிஸ்தானின் எல்லைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், ஈரானை தனது நட்பு நாடாக தக்கவைப்பதன் மூலம் இந்தியா தரப்பில் பாகிஸ்தானுக்கு ஒரு நெருக்கடியை கொடுக்க முடியும். அதே சமயம், ஈரான் மூலம் வர்த்தகத்தின் புதிய பரிமாணத்தை உருவாக்க இந்தியா தயாராக உள்ளது. இது கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ள ஈரானிய பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: