தோகைமலை நாகனூரில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தோகைமலை: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. மழை காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி தொற்று நோயை தடுக்கும் வகையில் கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடந்த இந்த முகாமிற்கு குளித்தலை கால்நடை துறை உதவி இயக்குனர் முரளிதரன் தலைமை வகித்தார்.நாகனூர் ஊராட்சி மன்ற தலைவர் லதாராஜா, தோகைமலை வட்டார கால்நடை மருத்துவ அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நாகனூர் ஊராட்சி பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த செம்மறி மற்றும் வெள்ளாடுகள் என மொத்தம் 700 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் தடுப்பூசி போடாமல் விடுபட்ட ஆடுகளுக்கு தோகைமலையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது. தற்போது மாடுகள், கோழிகளுக்கு தினந்தோறும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்றும், இதனை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்தி கொள்ளுமாறும் கேட்டு கொள்ளப்பட்டனர்.

Related Stories: