முக கவசம் அணியாத 30 கடை வியாபாரிகளுக்கு அபராதம்

திருத்தணி:திருத்தணி நகராட்சியில் உள்ள காந்தி சாலை, மா.பொ.சி., சாலை மற்றும் அரக்கோணம் சாலை ஆகிய பகுதிகளில் முககவசம் அணியாமல் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் கொரோனோ வைரஸ் தொற்று பரவல் அபாயம் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா, திருத்தணி வட்டாட்சியர் உமா ,திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணி வருவாய் ஆய்வாளர் உதயகுமார் நகராட்சி சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் நகராட்சி அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் துரைக்கண்ணு கிருஷ்ணன், ரகுவரன் ஆகியோர் மேற்கண்ட பகுதிகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 30 கடைகளில் முககவசம் அணியாமல் வியாபாரம் செய்து வந்ததை கண்டுபிடித்த மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, கடை வாரியாக, 500 ரூபாய் முதல், 2000 ரூபாய் வரை, 30 கடைகளுக்கு, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், முககவசம் அணிந்து, சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தார்.

Related Stories: