வரலாறு காணாத ஜிடிபி சரிவுக்கு கடவுள் மீது பழி சுமத்தாதீர்கள் : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு ப.சிதம்பரம் பாய்ச்சல்!!

சென்னை : இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவுக்கு கடவுள் மீது பழியை போட வேண்டுமா என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 23.9% சரிவை எதிர்கொண்டு இருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சாடியுள்ளார். கொரோனா என்பதை கடவுளின் செயல் என்று நிர்மலா சீதாராமன் கூறி இருப்பதை சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார சீர்குலைவுக்கு கடவுள் மீது பழியை போடுகிறார் நிர்மலா சீதாராமன் என்று சிதம்பரம் கூறியுள்ளார். விவசாயிகளுக்கு கடவுளின் ஆசிர்வாதம் உண்டு என்பது வேளாண்துறையில் மட்டும் காணப்பட்டு இருக்கும் வளர்ச்சி வெளிப்படுத்தி இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். மனிதர்களால் பொருளாதாரத்தில் சரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஏழைகளின் கையில் பணம் இருந்தால் தான் நுகர்வு சக்தி அதிகமாகும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை தற்போதைய தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: