புதுக்கோட்டையில் கொரோனா வார்டில் ஆக்சிஜன் விநியோக பாதிப்பால் 3 பேர் உயிரிழந்த விவகாரம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கொரோனா வார்டில் ஆக்சிஜன் விநியோக பாதிப்பால் 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 70 வயதுக்கு மேற்பட்ட 2 ஆண்கள் மற்றும் 1 பெண் என மொத்தம் 3 பேர் ஆக.22ம் தேதி உயிரிழந்தனர். இந்த வார்டில் ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட திடீர் பாதிப்பே அவர்களது உயிரிழப்புக்கு காரணம் என புகார் எழுந்தது.

மேலும், நோயாளிகளின் கேஸ் ஷீட்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதும், பணி நேரத்தில் பணியாளர்கள் சிலர் இல்லை என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மயக்கவியல் துறை உதவிப் பேராசிரியர் கே.ரவிநாதன், மருத்துவத் துறைத் தலைவர் சி.பாபு ஆனந்த் மற்றும் செவிலியர்கள் 5 பேர் என 7 பேரிடம் விளக்கம் கேட்டு மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில், இவ்விகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆக்சிஜன் விநியோக பாதிப்பால் 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: