தெலங்கானாவிலிருந்து ரயிலில் நெல்லை வந்த 2600 டன் அரிசி: நெல்லை, தென்காசி ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடு

நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்ட ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக 2600 டன் அரிசி தெலங்கானா மாநிலத்திலிருந்து நெல்லைக்கு ரயிலில் வந்து சேர்ந்தது.  கொரோனா ஊரடங்கையொட்டி தமிழக ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. அந்தவகையில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்குவதற்காக தெலங்கானா மாநிலத்தில் இருந்து 2600 டன் அரிசி சரக்கு ரயிலில் 45 பெட்டிகளில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு நேற்று வந்து சேர்ந்தது. இதையடுத்து அவற்றை லாரிகளில் தொழிலாளர்கள் ஏற்றியதை தொடர்ந்து நெல்லை, தென்காசி ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக நெல்லை சிவந்திப்பட்டியில் உள்ள முத்தூர் தானியக் கிடங்குக்கு கொண்டுசென்று சேமித்து வைக்கப்பட்டது.

Related Stories: