சீனாவின் உணவு விடுதி இடிந்த விபத்தில் 29 பேர் பலி!: பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது 2 மாடி கட்டிடம் இடிந்தது..!!

பீஜிங்: சீனாவில் 2 மாடிகளை கொண்ட உணவு விடுதி இடிந்து நொறுங்கிய விபத்தில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஷன்ஜி மாகாணத்தின் லென்சன் நகரில் இந்த விபத்து நேரிட்டது. உணவு விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.

இந்த விபத்து நிகழும் போது உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக மேற்கொண்டனர். இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 29 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 28 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. விபத்து நேரிட்ட இடத்தில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து கொரோனா பரவல் தடுப்பு விதிகளின்படி முன்னெச்சரிக்கையுடன் மீட்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த லின்ஃபென் நகர் தலைநகர் பீஜிங்கிலிருந்து தென்மேற்கு திசையில், 630 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Related Stories: