பிரசாந்த் பூஷனுக்கு என்ன தண்டனை? நாளை தீர்ப்பு

புதுடெல்லி: மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியையும் விமர்சித்து டிவிட்டரில் வெளியிட்ட பதிவால், அவர் மீது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், பூஷன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தன் செயலுக்கு மன்னிப்பு கேட்பதற்கு அவருக்கு நீதிமன்றம் முதலில் 2 நாளும், தண்டனைக்கான விசாரணையின் போது இறுதியாக அரை மணி நேரமும் நீதிமன்றம் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், அவர் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டதால், 25ம் தேதியன்று, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கான தண்டனை விவரத்தை அறிவிக்கும் தீர்ப்பை, நாளை வழங்குவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related Stories: