பர்கூர் தனிமை மையத்தில் கொரோனா தொற்றாளர்கள் ஆடி, பாடி கொண்டாட்டம்: சமூக வலை தளங்களில் வைரலாகும் ஆடியோ

கிருஷ்ணகிரி:  பர்கூர் தனிமை மையத்தில் கொரோனா தொற்றாளர்கள் ஆடி, பாடி மகிழும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பர்கூர் அரசு பொறியியல்  கல்லூரியில், கொரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் உள்ள நோயாளிகள், கவச உடை அணிந்த ஒருவர் நடிகர் கமலஹாசன்  நடித்த அபூர்வ சகோதரர்கள் என்ற திரைப்படத்தில் இருந்து வரும் “அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ” என்ற பாடலை செல்போனில்  பாடவிட்டு நடனம் ஆடியுள்ளார். இதே போல், மேலும் சிலர் கொரோனா வார்டிலேயே கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளனர். இந்த வீடியோ சமூக  வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: