கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மருத்துவம், கல்விக்கு ரூ.2 லட்சம் உதவி நிதி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கலைஞர் அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 2 லட்சம் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கலைஞர் சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கும் வட்டித் தொகை மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் முதல் 2007 ஜனவரி வரை வழங்கப்பட்டது. வைப்பு நிதியாக போடப்பட்ட ஐந்து கோடியில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டது.

அதுபோக மீதமுள்ள ரூ.4 கோடியில் கிடைக்கும் வட்டி தொகையில் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.5 கோடியே 9 லட்சத்து 90ஆயிரம். தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால் 2020, மே மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நிதி பெறுவோர் வெளிமாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.

Related Stories: