தெற்குராஜன் வாய்க்கால் குறுக்கே கான்கிரீட் பாலம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே மாதிரவேலூரில் தெற்கு ராஜன் வாய்க்கால் குறுக்கே அமைந்துள்ள மூங்கில் பாலத்தை அகற்றிவிட்டு கான்கிரீட் பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேலூர் கிராமத்தில் தெற்கு ராஜன் வாய்க்கால் குறுக்கே காட்டு நாயக்கர் வாழும் பகுதிக்கு செல்ல மூங்கில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் வலுவிழந்து உள்ளதால் எந்த நேரமும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்பு இதே பாலத்தின் வழியாக நடந்து சென்ற 3 வயது ஆண் குழந்தை தவறி வாய்க்காலில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது.

அதே பாலம் தொடர்ந்து மூங்கிலாலயே அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலம் சிமெண்ட் காங்கிரீட் பாலமாக கட்டப்பட்டால் அந்த பகுதிக்கு செல்பவர்கள் சிரமமின்றி செல்வார்கள். தற்பொழுது அங்கு செல்பவர்கள் கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்து சுற்று வழியாக 1.5 கிலோ மீட்டர் தூரம் சென்று கடந்து சென்று வருகின்றனர். எனவே எளிதில் அனைவரும் கடந்து சென்று வரும் வலிமையற்ற மூங்கில் பாலத்தை அகற்றிவிட்டு சிமெண்ட் கான்கிரீட் நடைபாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: