தெலங்கானா முதல்வர் மகளின் உதவியாளர் உள்ளிட்டோர் சித்ரவதை 10 ஆண்டுகளில் 143 பேர் பலாத்காரம் ஆன்லைனில் 10,000 நிர்வாண வீடியோ: இளம்பெண் புகாரால் பெரும் பரபரப்பு

திருமலை: தெலங்கானா மாநில முதல்வர் மகளின் முன்னாள் உதவியாளர், வக்கீல்கள் உட்பட பலர் தன்னை கடந்த 10 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்து விட்டதாக, ஐதராபாத் பஞ்சகுட்ட போலீசில் இளம்பெண் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்தவர் சரிதா (25). இவர் ஐதராபாத் பஞ்சகுட்டா போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2009ம் ஆண்டு கொண்டாரெட்டி கிராமத்தை ரமேஷ் என்பவருக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கணவரின் பெற்றோர் மற்றும் சகோதரர், சகோதரி ஆகியோர் 9 மாதங்களாக தொடர்ந்து சித்ரவதை செய்தனர். மேலும், என்னுடைய கணவர் குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.  இதனால், கடந்த 2010ம் ஆண்டு எங்களுக்கு விவாகரத்தானது. பிறகு படிப்பதற்காக கல்லூரிக்கு சென்றேன். அப்போது, ஏற்பட்ட சிலருடைய அறிமுகம் என்னுடைய வாழ்க்கையை முழுவதுமாக சீரழித்தது.

இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள், ஜிம் உரிமையாளர் சென்னையை சேர்ந்த வக்கீல்கள்,  தெலங்கானா மாநில முதல்வர் மகள் கவிதாவின் முன்னாள் உதவியாளர் சந்தோஷ் ராவ், பெங்களூரை சேர்ந்த நாத் ஆகியோர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும், அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர். கத்தியை காட்டியும், பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவோம், ஆசிட் ஊற்றி விடுவோம் என மிரட்டி நிர்வாணமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்தனர். அதனை அவர்களின் நண்பர்களுக்கு செல்போன் மூலமாக அனுப்பி, அவர்களையும் வரவழைத்து என்னுடன் பாலியலில் உறவில் ஈடுபடுத்தினர். கடந்த 10 ஆண்டுகளில் என்னை இதுபோல், 143 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

* கடந்த 10 ஆண்டுகளில் 143 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

* 10 ஆயிரத்துக்கும் மேல் நிர்வாணமாக  வீடியோக்கள் எடுத்துள்ளனர்.

* அவை ஆன்லைனில் வெளியிடப்பட்டு உள்ளது.

Related Stories: