5 மாநிலங்கள், மத்திய பிரதிநிதிகளுடன் திருநங்கைகளுக்கான திட்டங்கள், கொள்கைகள் வகுக்க தேசிய குழு: மத்திய அரசு அமைத்தது

புதுடெல்லி: திருநங்கையர்களுக்கான கொள்கைகள், சட்ட திட்டங்களை உருவாக்க, மத்திய - மாநில அரசகளை சேர்ந்த தேசிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.சமுதாயத்தில் மூன்றாம் பாலினத்தவராக கருதப்படும் திருநங்கைகள், சமூகத்தில் ஏராளமான பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு படிப்பு, வேலை உட்பட பல்வேறு உரிமைகள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. பெற்றோர்கள் மட்டுமின்றி, சமூகத்தாலும் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, அவர்களின் வாழ்க்கை திசை மாறி, பாலியல் தொழில் செய்வது உள்ளிட்ட சட்ட விரோத வழிகளில் செல்கின்றனர்.இவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், தடைகள் மற்றும் அதற்கு தீர்வு காண்பதற்காக திட்டங்கள், கொள்கைகளை வகுப்பதற்காக மத்திய - மாநில அரசுகளின் பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* இந்த தேசிய குழுவின் தலைவராக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் செயல்படுவார். இதன் துணை தலைவராக அத்துறையின் இணை அமைச்சர் செயல்படுவார்.

*  திருநங்கையர்களுக்கான கொள்கைகள், நிகழ்ச்சிகள், சட்டங்கள், திட்டங்கள்  ஆகியவற்றை இக்குழு உருவாக்கும்.

* இதில், 5 மாநிலங்களின் பிரதிநிதிகள், 10 மத்திய அரசு துறை,  திருநங்கையர் சமுதாயத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர்.

*  இக்குழுவில் நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு பகுதிகளை சேர்ந்த பிரதிநிதிகள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவார்கள்

* இது தவிர, இப்பகுதிகளை சேர்ந்த 5 திருநங்கையர்களும் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Related Stories: