ஸ்ரீவைகுண்டம் அருகே ரவுடி துரைமுத்துவின் உடல் மீது அரிவாள் வைத்து அடக்கம் : ஊர்வலமாக சென்ற உறவினர்கள்

தூத்துக்குடி:  தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு வீசிக்கொன்ற பிரபல ரவுடி துரைமுத்துவின் உடல் மேலமங்கலக்குறிச்சி அருகே அடக்கம் செய்யப்பட்டது. ரவுடி துரைமுத்துவின் உடலை அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள்  ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர் மேலமங்கலக்குறிச்சி அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ரவுடி துரைமுத்துவின் உடல் மீது அரிவாளை வைத்து அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர். உடல் அடக்கம்  செய்யும்போது அசம்பாவிதங்கள் ஏதும் நேர்ந்திடாத வகையில் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

தூத்துக்குடியை கலக்கி வந்த ரவுடி துரைமுத்துவின் மீது 2 கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 10 வழக்குகள்  நிலுவையில் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் ஏரலை அடுத்த மேலமங்கலக்குறிச்சியை சேர்ந்த துரைமுத்து கடந்த 2018ம் ஆண்டு ஆறுமுகசாமி என்பவரை தனது நண்பருக்காக கொலை செய்தார். மேலும் பட்டியல் பிரிவை சேர்ந்த வினோத்  மற்றும் ராமசந்திரன் என்ற இருவரையும் வெட்டி கொன்றான். அதற்கு பழிக்குப்பழியாக வினோத் மற்றும் ராமச்சந்திரனின் உறவினர்கள் துரைமுத்துவின் தம்பி கண்ணனை கூலிப்படை வைத்து வெட்டி கொன்றனர்.

இந்த கொலையை  அரங்கேற்றிய நெல்லை கண்டிகைபெரியை சேர்ந்த கூலிப்படை தலைவன் கணேசபாண்டியனை கடந்த 2019ம் ஆண்டு ரவுடி துரைமுத்து வெட்டி கொன்றான். இதனையடுத்து கணேசபாண்டியனின் கும்பல் துரைமுத்துவை தாக்க முயன்றபோது,  துரைமுத்துவை காப்பாற்றி  கைது செய்ய போலீசார் முயன்றனர். அப்போது வல்லநாடு மலையில் ஏற்பட்ட மோதலில் காவலர் சுப்ரமணியனும், ரவுடி துரைமுத்துவும் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து காவலரின் உடல் நேற்று அரசு  மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் ரவுடியின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: