அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும்: அந்நாட்டு தேர்தல் ஆய்வாளர் லிட்ச்மேன் கணிப்பு..!!

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பது அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி ஜோ பிடனுக்கு அதிக வாக்குகளை பெற்றுத்தரும் என்று பிரபல தேர்தல் கணிப்பாளர் ஆலன் லிட்ச்மேன் கூறியுள்ளார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்று பேசிய ஆலன், அமெரிக்க அதிபர் வெற்றியை நிர்ணயிப்பதில் 13 மாநிலங்கள் மிக முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளார். இதில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் 7 மாநிலங்களில் தோல்வி முகத்தில் இருப்பதாகவும், ஆலன் லிட்ச்மேன் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கூடுதல் வாக்குகளை பெற முக்கிய பங்கு வகிப்பார் என்பதும் பேராசிரியர் ஆலன் லிட்ச்மேனின் கணிப்பு. இதுகுறித்து தொடர்ந்து பேசிய அமெரிக்கா தேர்தல் ஆய்வாளர் ஆலன் லிட்ச்மேன், அவர் தகுதியான ஒரு பெண் வேட்பாளர். தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெறும் பட்சத்தில், கமலா மிகசிறந்த துணை அதிபராக செயல்படுவார். அவருக்கு நிர்வாக அனுபவம் அதிகம்.

அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலத்தின் முக்கிய நிர்வாகியாக பணியாற்றி இருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினராக நீண்ட காலம் பொறுப்பு வகித்துள்ளார். தகுதியும், திறமையும் வாய்ந்த நிர்வாகி என்பது ஐயமில்லை என குறிப்பிட்டுள்ளார். 1980ம் ஆண்டு முதல் அமெரிக்க அதிபர் யார் என்பதை சரியாக கணித்து வரும் பேராசிரியர் லிட்ச்மேனின் கருத்து அதிபர் டிரம்ப் தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: