எம்.குண்ணத்தூர் கிராமத்தில் திறந்தவெளி கிணறுக்கு கம்பி வலை அமைப்பு

உளுந்தூர்பேட்டை :  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது எம்.குண்ணத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் பழையகாலனி வடக்குத் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக கிணறுகள் அமைக்கப்பட்டது. இந்த கிணறுகள் தற்போது போதிய பராமரிப்பு இன்றி காணப்படுவதாலும், உபயோக மற்ற நிலையில் உள்ளதால் இந்த கிணறுகளை கம்பி வளைகள் மூலம் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றிய தலைவர் ஏழுமலை உள்ளிட்ட பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து கடந்த 23ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உத்தரவின்பேரில் தற்போது திறந்தவெளி கிணற்றின் மேல் பகுதியில் கம்பி வலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். …

The post எம்.குண்ணத்தூர் கிராமத்தில் திறந்தவெளி கிணறுக்கு கம்பி வலை அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: