புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு மதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் எதிரே புதிய கல்வி கொள்கையை எதிர்த்து காஞ்சி மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நேற்று நடந்தது. மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகில் மதிமுக மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா தலைமையில் மதிமுகவினர் கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், திருப்போரூர் வடக்கு ஒன்றிய  செயலாளர் லோகு, மாணவரணி மாவட்ட செயலாளர் இளையராஜா உட்பட மதிமுகவினர் 50  க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், மல்லை சத்யா, செய்தியாளர்களிடம் கூறியதாவது, 2020 புதிய கல்வி கொள்கையை தமிழகம் எதிர்க்கிறது. கடந்த 1968ல் தமிழ்நாடு முதல்வராக இருந்த அண்ணா, மும்மொழி கொள்கைக்கு இனி தமிழ்நாட்டில் இடமில்லை என்றார். அதேபோல், தற்போது முதல்வராக உள்ள எடப்படி பழனிசாமி புதிய கல்வி கொள்கையை தமிழகம்  எதிர்க்கிறது என தீர்மானத்தை இயற்ற வேண்டும். தமிழகத்தில் 5 கட்ட தேர்வுகளை மாணவர்களுக்கு புகுத்துகிறார்கள். 3, 5, 8, 10 மற்றும் 12ம் வகுப்புக்கு பொது தேர்வு என மாணவர்களை கசக்கி பிழிகின்றனர். அப்போதையை பிரதமராக இருந்த மொரார்ஜி தேசா, இந்தியை எதிர்ப்பது செத்த குதிரை என்றபோது, தனக்கு வந்த இந்தி கடிதத்தை பிரதமருடைய முகத்துக்கு எதிரே கிழித்துவிட்டு, கடைசி தமிழருடைய கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை இந்தியை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என வைகோ கூறினார் என்றார்.

உததிரமேரூர்: மாவட்ட மாணவரணி அமைப்பாளர் காசிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சங்கரன், மாவட்ட அவைத் தலைவர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் வளையாபதி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷமிட்டனர். மதிமுக நிர்வாகிகள் தயாளன், பொன்னுசாமி, மணி, ரஞ்சித்குமார், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுராந்தகம்: மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில் மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுராந்தகம் ஒன்றிய வாலிபர் சங்க செயலாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஐயப்பன், நிர்வாகி செந்தமிழன், மாணவர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் லிங்கேஸ்வரன் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் நடந்தது.

Related Stories: