ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொரோனா உறுதி!: விரைவில் குணமடைய மாநில முதல்வர் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து..!!

ஜெய்ப்பூர்:  நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 63,489 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 25 லட்சத்து 89 ஆயிரத்து 692 ஆக அதிகரித்துள்ள நிலையில், 18 லட்சத்து 62 ஆயிரத்து 258 பேர் குணமடைந்துள்ளனர். 6 லட்சத்து 77 ஆயிரத்து 444 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட 944 பேர் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து, நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 980 ஆக உயர்ந்துள்ளது. பீகார், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ள 8 - வது மாநிலமாகியுள்ளது. இருப்பினும், கொரோனாவால் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், அரசியல் கட்சி தலைவர், சினிமா பிரபலங்கள், நீதிபதிகள் என பல்வேறு தரப்பினரும்  பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரஜித் மஹந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அவர் விரைவில் குணமடைய மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: