சென்னை:. பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மாவட்டம் கொட்டரை பகுதியில் மருதையாற்றுக்கு அருகில் உள்ள திடலில் மட்டைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருவதால், அதில் பங்கேற்பதற்காகவும், போட்டிகளைக் காண்பதற்காகவும் வந்த இளைஞர்கள் சிலர் அந்த பள்ளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். மக்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத நீச்சல் தெரியாத 4 இளைஞர்கள் ஆழத்தில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளனர். அதைப் பார்த்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பெண்கள் தங்களின் சேலையை கயிறாக மாற்றி அந்த இளைஞர்கள் நோக்கி வீசியுள்ளனர்.