ஆகஸ்ட் 17-ம் தேதி முதல்வர் பழனிசாமி திருவள்ளூர் பயணம்...!! கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய ஆக. 17-ம் தேதி முதல்வர் பழனிசாமி திருவள்ளூர் செல்கிறார். ஆக.20-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் அன்று பிற்பகல் தர்மபுரி மாவட்டத்திலும் ஆய்வு செய்கிறார். 21-ம் தேதி கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்.  உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் என கொரோனா தொற்று அடுத்த கட்ட பாய்ச்சல் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி  பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று அந்த மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து, முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார்.

அதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுசெய்து ஆலோசனை வழங்கி வருகிறார். இந்நிலையில் அதன் ஒருபகுதியாக கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் 17-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்கிறார். அதனை தொடர்ந்து 20-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி மாவட்டங்களிலும், 21-ம் தேதி கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.

Related Stories: