ஆரல்வாய்மொழியில் அதிக பாரம் ஏற்றி வந்த 5 டாரஸ் பறிமுதல்

ஆரல்வாய்மொழி: திருநெல்வேலியில் இருந்து குமரிக்கு கல், ஜல்லி, பாறை பொடி லோடுடன் டாரஸ் லாரிகள் தினமும் அதிகளவில் வருகின்றன. மேலும் இவை பாதுகாப்பற்ற முறையில் அதிக லோடுடன் வருகின்றன. இதனால் சாலையில் செல்லும்  வாகனங்களிலும், சாலையோரமாக நடந்து செல்லும் பொது மக்கள் மீதும் ஜல்லிகள் விழுந்து ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இது குறித்து தொடர்ந்து பல புகார்கள் வந்தன. இந்நிைலயில் நேற்று தோவாளை தாசில்தார் ராஜேஸ்வரி ஆரல்வாய்மொழி முத்துநகர் பகுதியில் வரும்போது அவ்வழியாக 5 டாரஸ் லாரிகள் வந்தன.

அவற்றில் முறையான அனுமதி இல்லாமல் அதிக அளவில் ஜல்லி, பாறை பொடி இருந்தது. இதனால் தாசில்தார் அந்த வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினார். பின்னர் அவற்றை பறிமுதல் செய்து வருவாய் ஆய்வாளர் பழனிவேல்ராஜன் மூலம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தார். பின்னர் அதிக பாரம் ஏற்றி வந்ததாக டாரஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: