சுதந்திர தினத்தை ஒட்டி, தனிசிறப்புடன் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் அறிவிப்பு!!

டெல்லி : சுதந்திர தினத்தை ஒட்டி, காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருதுகள்  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 631 காவலர்கள் பெயர் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் குடியரசு மற்றும் சுதந்திர தினங்கள் அன்று, அனைத்து இந்திய அளவில் சிறப்பாக பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது மத்தியஅரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.  காவல் துறை அதிகாரிகளின் செயல்பாடு மற்றும் அவர்களின் சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு குடியரசு விருதுகள் வழங்கப்படுகிறது .

இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருது இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறப்புக்காவல் 2ம் அணியின் கமாண்டண்ட் ஆண்டனி ஜான்சன் ஜெயபாலுக்கும், தமிழ்நாடு சிறப்புக்காவல் 7ம் அணியின் கமாண்டண்ட் ரவிச்சந்திரனுக்கும் தகைசால் பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, தமிழகத்தை சேர்ந்த 21 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி டிஐஜி சத்திய பிரியா, கோவை மாநகர காவல் துணை ஆணையர் உமா, சென்னை நுண்ணறிவு பிரிவு காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 21 பேருக்கு பாராட்டத்தக்க பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: