அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதற்கு மன்னார்குடி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி..!!

திருவாரூர்:  திருவாரூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதால் அந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மன்னார்குடி அருகே பைங்காநாடு பஞ்சாயத்திற்குட்பட்ட துளசேந்திரபுரம் தான் கமலா ஹாரிஸ் குடும்பத்தினரின் பூர்வீக கிராமம். 4 தெருக்களை கொண்ட இந்த கிராமத்தில் தான் கமலாவின் தாத்தா பி.வி. கோபாலன் பிறந்தார். அங்குள்ள தர்மசாஸ்தா சேவகப்பெருமாள் கோயில் தான் அவரது குலதெய்வ கோயில்.

2014ம் ஆண்டு இந்த கோயிலை பெரியளவில் கட்டி குடமுழுக்கு நடத்துவதற்கு கோபாலன், பாலசந்திரன் உட்பட கமலா ஹாரிசின் குடும்பத்தினர் நன்கொடை வழங்கியதை காண்பிக்கும் கல்வெட்டை இப்போதும் காணலாம். இதுகுறித்து மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்த கிராம மக்கள், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் தங்கள் கிராமத்தை சேர்ந்தவரின் பேத்தி போட்டியிடுவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.

பைங்காநாட்டில் பிறந்த பி.வி. கோபாலன், பிரிட்டன் ஆட்சி காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியில் ஸ்டெனோ கிராபராக பணியாற்றினார். இவரது திறமையை அறிந்த பிரிட்டன் நிர்வாகம் ஜாம்பியா நாட்டில் அகதிகளை கட்டுப்படுத்த கோபாலனை அந்த நாட்டுக்கு அனுப்பியது. மேலும் தமது தாத்தாவே தனக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார் என்று கமலா கூறி வருவதையும் கிராமமக்கள் சுட்டிக்காட்டினர்.

Related Stories: