ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கொரோனாவை விரட்டும் 8 மொழிகளில் பேசும்: வந்து விட்டது ஸ்மார்ட் மாஸ்க்

டோக்கியோ: ஜப்பான் நிறுவனம் தயாரித்துள்ள முகக்கவசமானது 8 மொழிகளில் மொழி மாற்றம் செய்யும் நவீன தொழில்நுட்ப வசதியை கொண்டுள்ளது. கொரோனா தாக்குதல் காரணமாக, உலகம் முழுவதிலும் மக்கள் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாகி விட்டது. இதனால், இது உலகளவில் மிகப்பெரிய வர்த்தக பொருளாக மாறி விட்டது. சாதாரண டெய்லர் கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை, இவற்றை மும்முரமாக தயாரித்து விற்பனை செய்கின்றன. அதனால், இதிலும் போட்டி வந்து விட்டது. எனவே, மக்களின் மனதை கவரும் வகையில் இந்த முகக்கவத்திலும் நவீனமயங்களை புகுத்த, பல்வேறு நிறுவனங்கள் முயன்று வருகின்றன.

இந்நிலையில், ஜப்பானை சேர்ந்த ‘டோனட் ரோபோடிக்ஸ்’ என்ற நிறுவனம், ’ஸ்மார்ட் மாஸ்க்’ என்ற பெயரில் புதிய முகக்கவசத்தை தயாரித்துள்ளது. பல்வேறு மின்னணு தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த முகக்கவசம், ஒருவர் பேசுவதை 8 மொழிகளில் மொழி மாற்றம் செய்து சொல்லும் வசதியையும், பேசுபவரின் சத்தத்தை அதிகமாக்கி கொடுக்கும் வசதியையும் கொண்டுள்ளது. இதன் மூலம், சமூக இடைவெளியையும் பின்பற்ற முடியும். இந்த முகக்கவசத்துடன் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன், மைக்ரோபோன் மற்றும் ப்ளுடூத் மூலம் தொடர்பு கொள்ளும் வசதியும் உள்ளது. இது, வெள்ளை பிளாஸ்டிக் மற்றும் சிலிகான் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த முகக்கவசம் ஜப்பான், சீனா, கொரியா, இந்தோனேஷியா, ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யும்.

Related Stories: