ஆன்லைன் வரி விசாரணை வசதி தொடக்கம் சுயசார்பு இந்தியாவை கட்டமைக்க நிலுவை வரியை செலுத்துங்கள்: மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: ஆன்லைன் முறையில் வரி விசாரணை வசதியை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்த பிரதமர் நரேந்திரமோடி, ‘சுயசார்பு இந்தியாவை கட்டமைக்க மக்கள் நிலுவை வரியை செலுத்த முன்வர வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிப்படையான வரிவிதிப்பு  நேர்மையானவர்களை கவுரவித்தல் என்ற இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் புதுடெல்லியில் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

‘வெளிப்படையான வரிவிதிப்பு  நேர்மையானவர்களை கவுரவித்தல்’ என்ற தளம் தொடங்கப்பட்டுள்ளது. தடையில்லாத மதிப்பீடு, தடையில்லாத மேல்முறையீடு மற்றும் வரி செலுத்துவோருக்கான சாசனம் போன்ற மிகப்பெரும் சீர்திருத்தங்களை இது கொண்டுள்ளது.

குடிமக்களுக்கு தடையில்லாத முறையீட்டுக்கான வசதி, தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த தினமான செப்டம்பர் 25ம் தேதி நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வரும். இதுபோல் நேர்மையான முறையில் வரி செலுத்துவோரை கவுரவிக்கும் தளமும் செயல்படும். தேசத்தை கட்டமைக்க உதவும் கையில் நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கையை எளிதாக்குவது அரசின் பொறுப்பு. ஆவணங்களைப் பரிசீலித்தல், நோட்டீஸ் அளித்தல், ஆய்வு அல்லது மதிப்பீடு செய்தல் என அனைத்திலும் வரி செலுத்துவோரும், வருமான வரி அதிகாரியும் நேரடியாக சந்திக்க தேவையில்லை. வரி வரி செலுத்துவோருக்கான சாசனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது வரி செலுத்துவோரின் மரியாதை மற்றும் உணர்வுகளை கவனத்தில் கொண்டுள்ளது. நம்பிக்கை அம்சத்தின் அடிப்படையில் உள்ளது. மற்றும் மதிப்பீடு செய்பவர், எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் சந்தேகப்பட முடியாது. கடந்த 6 ஆண்டுகளில் வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை சுமார் 2.5 கோடி அதிகரித்துள்ளது. எனினும், 130 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில், 1.5 கோடி பேர் மட்டுமே வரி செலுத்துகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. பொதுமக்கள் தாங்களாகவே சுயபரிசோதனை செய்து கொண்டு, நிலுவை வரியை செலுத்த முன்வர வேண்டும். இது சுயசார்பு இந்தியாவை உருவாக்க உதவும் என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புடவை பார்டருக்கு மேட்சாக முகக்கவசம் அணிந்திருந்தார்.

Related Stories: