ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை குப்பை வண்டியில் ஏற்றி செல்லும் அவலம்: மக்கள் அதிர்ச்சி

நெல்லூர்: ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை குப்பை வண்டியில் ஏற்றி சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலி பகுதியில் கொரோனாவால் 2 பேர் இறந்துள்ளனர். அவர்களின் சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் இல்லை என்பதால், குப்பை ஏற்றி செல்லும் டிராக்டரில் கொண்டு சென்றுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை சில இடங்களில் டிராக்டர், ஆட்டோக்களில் கொண்டு சென்ற அவலம் அரங்கேறியது. இது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது. கொரோனவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஆம்புலன்சில் ஏற்றி சென்று சுகாதாரத்துறை நெறிமுறைகளின்படி அடக்கம் செய்ய வேண்டும். ஆனால் கொரோனா பரவலின் வேகத்தை சமாளிக்க முடியாமலும், இறந்தவர்களின் பின்புலத்தை வைத்து சில மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஜேசிபி, டிராக்டர் போன்ற வாகனங்களில் கொண்டு சென்று அடக்கம் செய்வது தொடர்கிறது.

Related Stories: