புத்காம்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது நஜார் உயிரிழந்துள்ளார். சமீப காலங்களாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்துவது அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம், பந்திபோரா பாஜக முன்னாள் தலைவர் வாசிம் பாரி, அவரது தந்தை மற்றும் சகோதரர் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேரும் உயிரிழந்தனர். அதேபோல், கடந்த 6ம் தேதி, குல்காம் பகுதியில் பாஜக பஞ்சாயத்து தலைவர் சர்பஞ்ச் சஜத் அகமது கான்டே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.