கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 1.50 லட்சம் கனஅடி நீர் திறப்பு

பெங்களூரு : கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால், தமிழகத்துக்கு 1.50 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி  நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, ஹாரங்கி  அணைகள் நிரம்பி வருகின்றன. 124.80 உயரம் கொண்ட கேஆர்எஸ். அணையின்  நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 117.75 அடி நிரம்பி இருந்தது. அணைக்கு  வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து  வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  

அதேபோல், கடல்  மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று மாலை  நிலவரப்படி 2,278.28 அடியாக இருந்தது. வினாடிக்கு 57,795 கனஅடி தண்ணீர்  வந்து கொண்டுள்ளது. இதையடுத்து, வினாடிக்கு 60 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர்  வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும்  கனமழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதால் வினாடிக்கு 1.50 லட்சம் கனஅடி தண்ணீர்  வௌியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள்  பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: