திருச்சி : திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பணிபுரியும் 20 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் குறையாமல் இருந்து வருகிறது. சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுக்கு , பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.