×

வேலம்மாள் போதி பள்ளி மாணவர்கள் சாதனை

திருவள்ளூர்: உலக அளவில்  மாணவர்கள் கலந்து கொண்ட  இணையவழி “சர்வதேச பிகாஸோ ஓவியப் போட்டி”  நடைபெற்றது. இந்த ஓவியப் போட்டியில் சென்னையை அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். உலக அளவிலான  ஓவிய போட்டியில் ஜி.வி.மல்லிகா ஷிவானி என்ற மாணவி கிரியேட்டிவ் டைமண்டு ஆர்டிஸ்ட் என்ற போட்டியிலும், மாணவன் கே.பி.ஆதித்ய கிருஷ்ணன் கிரியேட்டிவ் கோல்ட் ஆர்டிஸ்ட் என்ற ஓவிய போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்றனர். இதையொட்டி இரண்டு பேருக்கும் சர்வதேச திறன்மிகு படைப்பாளர்கள் விருது வழங்கி பாராட்டினர். ஓவிய போட்டியில் சாதனை படைத்த மாணவர்களையும், இதற்கு காரணமாக இருந்த ஆசிரியர்களையும் வேலம்மாள் கல்வி குழுமத்தின் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம், இயக்குனர் எம்.வி.எம்.சசிகுமார் ஆகியோர் பாராட்டி, பரிசு வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Velammal Bodhi School, Students, Achievement
× RELATED உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 6 பேர் மாயம்!: போலீசார் விசாரணை