களக்காடு: களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி பெரியகுளம் மூலம் அப்பகுதியில் உள்ள 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரியகுளங்களில் ஒன்றாக திகழும் இந்த குளத்திற்கு திருக்குறுங்குடி மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து வரும் கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் குளம் தண்ணீர் இன்றி வறண்டது. தொடர்ந்து வெயில் கொளுத்தியதால் குளத்திற்கு தண்ணீர் வரத்து தடைபட்டது. ஜூன் மாதம் பெய்ய வேண்டிய பருவமழையும் பொய்த்து போனதால் 4 மாதங்களாக குளம் வற்றி வறண்டு காட்சி அளித்தது.