வக்கீல்கள் கோர்ட்டில் ஆஜராக இலவச வீடியோ கான்பரன்ஸ் மையம்: முன்னாள் நீதிபதி தொடங்கிவைத்தார்

சென்னை: கொரோனா ஊரடங்கினால் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் சில மாவட்ட நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் ஒரு ஐடி எண், பாஸ்வேர்டு தரப்படுகிறது. இந்த வசதியை பயன்படுத்த ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப், கம்ப்யூட்டர் தேவை. இந்த வசதிகள் இல்லாத வக்கீல்கள் பலர் நீதிமன்றங்களில் ஆஜராக சிரமப்பட்டு வருகிறார்கள்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் எதிரே உள்ள அங்கப்பன் தெருவில் உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்க செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் அலுவலகத்தில் இலவச வீடியோ கான்பரன்ஸ் மையம் அனைத்து வசதிகளுடனும் தொடங்கப்பட்டுள்ளது. சேவை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தமிழ்வாணன் திறந்துவைத்தார். இந்த இலவச மையத்தை சென்னையில் உள்ள வசதியில்லாத இளம் வக்கீல்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நீதிபதி தமிழ்வாணன் மற்றும் வக்கீல்கள் சங்க செயலாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: