ரக்‌ஷா பந்தன் மோடி வாழ்த்து

புதுடெல்லி: ரக்‌ஷா பந்தன் தினத்தையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கொரோனா பாதிப்பிலும் ரக்‌ஷா பந்தன் தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பாடகி லதா மங்கேஷ்கர் மற்றும் ஆன்மிக தலைவர் அமிர்தானந்தமயி ஆகியோர் பிரதமர் மோடிக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்து செய்தியில், ‘‘ரக்‌ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஆசிர்வாதத்தால் நாடு பல சாதனைகளை அடையும்.  நமது பெரிய தேசத்திற்கு உழைப்பது எனது பாக்கியம். உங்களிடமிருந்தும், இந்தியாவின் பெண்கள் சக்தியிடம் இருந்து ஆசிர்வாதம் எனக்கு மிகுந்த பலத்தைத் தருகிறது. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கும் அவை மிக முக்கியமானவை’’ என பதிவிட்டுள்ளார்.

* சமஸ்கிருத தின வாழ்த்து

ஒவ்வொரு ஆண்டும் இந்து காலண்டரில் வரும் ஷரவன் மாதத்தில் பவுர்ணமி நாளன்று சமஸ்கிருத தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. நேற்று சமஸ்கிருத தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், “சமஸ்கிருதம் ஒரு அழகான மொழியாகும். பல ஆண்டுகளாக இது இந்தியாவை அறிவின் களஞ்சியமாக மாற்றியுள்ளது. சமஸ்கிருதத்தை ஊக்குவித்தல், கற்பித்தல் மற்றும் பயன்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: