டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அமித்ஷா செல்லாதது ஏன்? சசிதரூர் கேள்வி

புதுடெல்லி:மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் டெல்லி அருகே அரியானா மாநிலம் குர்கானில் உள்ள மெடன்டா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரான சசிதரூர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘உடல் நலம் பாதிக்கப்பட்ட நமது உள்துறை அமைச்சர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லாமல், அண்டை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துமனைக்கு சென்றது ஆச்சரியமாக உள்ளது. பொது நிறுவனங்கள், மருத்துவமனைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டுமெனில், அதிகாரமிக்கவர்கள் பொது நிறுவனங்களுக்கு ஆதரவு தர வேண்டும்’’ என கூறி உள்ளார்.

அமித்ஷா போலவே, கொரோனா பாதித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் ஆகியோரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

>