கச்சா எண்ணெய் இறக்குமதி சரிவு

புதுடெல்லி: இந்தியாவில் பெட்ரோலிய தேவைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதனால் சுமார் 80 சதவீதத்துக்கு மேல் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் ஆய்வு மையம், கடந்த ஜூன் மாத கச்சா எண்ணெய் இறக்குமதி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், 13.68 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, வாகன இயக்கம் முற்றிலும் முடங்கி விட்டது. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பொதுப்போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை வெகுவாக குறைந்து விட்டது.

Related Stories: