மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டத்தில் மொபைல் போன் உற்பத்தி செய்ய ஆர்வமில்லாத சீன நிறுவனங்கள்

புதுடெல்லி: கொரோனா பரவலுக்கு பிறகு சீனாவின் மீது பல்வேறு நாடுகள் கடும் கோபத்தில் இருக்கின்றன. இதனால், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேற திட்டமிட்டு வருகின்றன. இது இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்க சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் போன் உற்பத்தியில் இணைந்துள்ள பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகாட்ரான், சாம்சங் நிறுவனம், லாவா, மைக்ரோமேக்ஸ் உட்பட 22 நிறுவனங்கள் மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தி செய்ய விண்ணப்பம் செய்துள்ளன.  

இந்த திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.11.5 லட்சம் கோடி மதிப்பிலான மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்படும் எனவும், இதனால் நேரடியாக 3 லட்சம் பேர், மறைமுகமாக 9 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், ஷாமி, வோப்போ, விவோ உள்ளிட்ட சீன நிறுவனங்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கவில்லை. லடாக் எல்லை பிரச்னையை தொடர்ந்து இந்தியாவில் உற்பத்தி செய்ய விரும்பாமல் இந்த நிறுவனங்கள் ஒதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories: