திருவள்ளூர் கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்தோடும் தண்ணீரால் பொதுமக்கள் குளிக்கவும், நீச்சல் அடிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை!!!

திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் அம்மபள்ளி அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லை வந்தடைந்த நிலையில் கொசஸ்தலை ஆற்றில் குளிக்க வேண்டாமென்று திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக-ஆந்திர எல்லையான நகரில் உள்ள அம்மபள்ளி அணையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் அணையின் நீர்வரத்தானது அதிகளவு நிரப்பியுள்ளது. இதனையடுத்து அணையின் உபரி நீரானது தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆற்றின் 2 மதில்கள் வழியாக 600 கனஅடி வீதம் திறக்கப்பட்டுள்ள தண்ணீர், கொசஸ்தலை வழியாக மிக வேகமாக வந்துகொண்டிருக்கிறது. இதனால் ஆற்றுப்பாலத்தின் மேலே 3 அடுக்குக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து கொசஸ்தலை ஆற்றிற்கு பொதுமக்கள் குளிக்கவும், நீச்சல் அடிக்கவும், துணிதுவைக்கவும் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக பெய்து வரும் மழையால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்தானது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: