மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, கைகழுவுதல் ஆகிய 3 தாரக மந்திரங்களை கடைபிடித்தால் கொரோனா அச்சம் தேவையில்லை

அரியலூர்: கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவந்த அரியலூர் நகராட்சி ஆணையர் குமரன், பொதுமக்கள் கொரோனா குறித்து அச்சப்படாமல் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகழுவுதல் மற்றும் மருத்துவ ஆலோசனையை பின்பற்றுதல் ஆகியவற்றை மக்கள் கடைபிடித்தால் கொரோனா குறித்து அச்சப்படதேவையில்லை என்று கூறியுள்ளார். அரியலூர் நகரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட நகராட்சி ஆணையர் குமரனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆணையர் குமரன் பூரணகுணமடைந்து வீடு திரும்பினார். நேற்று அரியலூர் நகராட்சி ஆணையராக மீண்டும் பொறுப்பேற்க வந்த குமரனுக்கு நகராட்சி ஊழியர்கள் மேளதாளம் முழங்க ஆரத்தி எடுத்து, பூத்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தூய்மைபணியாளர்களிடம் பேசிய ஆணையர் குமரன் பாதுகாப்புடன் அரசின் நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் தொண்டாற்ற கேட்டுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா தொற்றை தன்னம்பிக்கையுடனும், மனத்தைரியத்துடனும் எதிர்கொண்டு மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்றியதால் 10 நாட்களில் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளேன். பொதுமக்கள் முககவசம் அணிதல், சமுக இடைவெளியை பின்பற்றுதல், கைகழுவுதல் ஆகிய மூன்று தாரக மந்திரங்களையும், மருத்துவர்களின் ஆலோசனைகளையும் பின்பற்றினால் கொரோனா குறித்து அச்சப்படத்தேவையில்லை என்று கூறினார்.

Related Stories: