குடும்ப பிரச்னை காரணமா!: 2 குழந்தைகளை ஆற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்பு.. குழந்தைகளை தேடும் பணி தீவிரம்..!!

தஞ்சை: தஞ்சாவூரில் குடும்ப பிரச்சனையில் இரண்டு குழந்தைகளை ஆற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்கப்பட்டிருக்கிறார். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரு குழந்தைகளும் தேடப்பட்டு வருகின்றனர். தஞ்சை சிவப்பநாயகன்வாரியை சேர்ந்தவர் சுரேஷ் ( 40 ). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், கொரோனா முடக்கம் காரணமாக வேலையிழந்து தற்போது சொந்த ஊரில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செல்விக்கும், இவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, நேற்றிரவு தகராறு முற்றியதை அடுத்து செல்வி தனது 12 வயது மகள் சுவேதா மற்றும் 4 வயது மகன் கோகுல் செழியன் ஆகியோரை அழைத்து சென்று தஞ்சை கல்லணை கால்வாயில் உள்ள ஆற்று பாலத்தில் இருந்து 2 குழந்தைகளையும் தள்ளவிட்டு இவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், விரைந்து காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஆற்றில் குதித்து  செல்வியை மீட்டனர்.

இருப்பினரும் குழந்தைகள் இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இந்த இரண்டு குழந்தைகளையும் தேடக்கூடிய பணியில் தீயணைப்புத்துறையினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகிறார்கள். குடும்ப பிரச்சனை காரணமாக தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்யும் நோக்கில் ஆற்றில் வீசி தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு குழந்தைகளும் சிறு குழந்தைகள் என்பதால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த சம்பவத்தினை தஞ்சை மேற்கு காவல்துறையினர் வழக்காக பதிவு செய்து செல்வி மற்றும் அவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: