பொதுத்துறை வங்கிகள், நிதி அமைப்புகளை சீரழித்து பொருளாதாரத்தை மோடி அரசு படுகுழியில் தள்ளிவிட்டது...காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!

டெல்லி: பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதித்துறை அமைப்புகளை சீரழித்து நாட்டின் பொருளாதாரத்தை மோடி அரசு படுகுழியில் தள்ளிவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரஞ்சித் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கிகள் சீரழிவுக்கு மூன்று முக்கிய காரணங்களை பட்டியலிட்டுள்ளார். அவற்றில் முதலாவதாக ரிசர்வ் வங்கி ஜூலை மாதம் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில், மோசமான கடன்கள் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கடனை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல் முடிவு எடுத்தப் போது, அதனை தடுத்து மென்மையான அணுகுமுறையை கையாள வற்புறுத்தப்பட்டதை அவரே வெளியிட்டுள்ளார் என்று சுர்ஜிவாலா கூறியிருக்கிறார். இதனால் தான் தாம் கட்டாயத்தின் பேரில் பதவி விலக நேரிட்டதாகவும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார். மோடி அரசின் தவறான நிர்வாகம் வங்கி துறை சீரழிவுக்கு எந்த வகையில் காரணமாக இருந்தது என்பதை ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக இருந்த விரலாச்சாரியா எழுதிய புத்தகத்தில் அம்பலமாகி இருப்பதாக சுர்ஜிவாலா தெரிவித்திருக்கிறார்.

வங்கி பொருளாதாரம் சீரழிவை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை மேலும் மோசமாக்கிவிட்டதாக சுர்ஜிவாலா குற்றம் சாட்டியுள்ளார். மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டில் வங்கி கடன் வளர்ச்சி விகிதம் 14 சதவீதமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ள சுர்ஜிவாலா, தற்போது வங்கி கடன் வளர்ச்சி விகிதம் 4 சதவீதமாக சரிந்திருப்பதை குற்றம்சாட்டியுள்ளார். இதுவரையில் ஜீரோ என்ற நிலையை எட்டவுள்ளதாக அவர் எச்சரித்திருக்கிறார். மோடி அரசு 150 லட்சம் கோடி பொதுத்துறை வங்கி பொருளாதாரத்தை சீரழித்துவிட்டதால் நாடு இன்று மகிழ்ச்சியற்ற நாடாக கவலையில் மூழ்கிக்கிடப்பதாக சுர்ஜிவாலா புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: