‘மொபைல் ரீசார்ஜ் செய்ய காசு இல்ல’: 82 லட்சம் வாடிக்கையாளர்கள் இழப்பு

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கு பாதிப்பால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 82 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. கொரோனா ஊரடங்கால் பலர் வேலையை இழந்தனர். வருவாய் குறைந்து விட்டது. இதனால் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏஜிஆர் கட்டண நிலுவை விவகாரம் தொடங்கி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது.

இதுதொடர்பாக இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், கடந்த மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 28 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. கடந்த ஏப்ரலில் வாடிக்கையாளர் இழப்பு எண்ணிக்கை 82 லட்சமாக உயர்ந்துள்ளது. ஜியோ நிறுவனத்தில் மட்டுமே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாறாக, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. வரும் மாதங்களில் இழப்பு மேலும் அதிகரிக்கலாம் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: