புதிய கல்வி கொள்கை இன்று வெளியீடு: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல்...!!!

டெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது ஊரடங்கு நாளை மறுநாள் ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி 7, லோக் கல்யாண் மார்க் பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முக்கியமாக புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர்கள் இன்று மாலை செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்கின்றனர். புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால் புதிய கொள்கை இன்று வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வேதுறை அமைச்சர் பியுஷ் கோயல், மனித மேம்பாட்டுத்துறை அமைச்சர்  ரமேஷ் போக்ரியால், சுற்றுச்சூழல் துறை பிரகாஷ் ஜவடேகர், சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: